பொம்மிகுப்பம் ஊராட்சியில் தொழிலாளர் தின கிராம சபை கூட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 May 2022

பொம்மிகுப்பம் ஊராட்சியில் தொழிலாளர் தின கிராம சபை கூட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் கிராமத்தில், தொழிலாளர் மே தின கிராமசபை கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திருமதி. தேன்மொழி வெங்கடேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர், திரு. சிவகுமார் அவர்கள், மற்றும் ராதாகிருஷ்ணன் சமூக ஊடக மையம் அனைவரையும் வரவேற்றார். அனைத்து வார்டு உறுப்பினர்களும் முன்னிலை வகித்தனர்.


சிறப்பு பார்வையாளராக வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் ஓவர்சீர், திருமதி. மாலா கூட்டத்தினை மிகச் சிறப்பாக ஒழுங்குபடுத்தினார். கிராம வளர்ச்சி பற்றிய பல்வேறு திட்டங்கள் விவாதிக்கப்பட்டது. கிராமத்தின் வரவு செலவு கணக்குகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. மக்களின் கோரிக்கைகள் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மிகச் சிறப்பாக கிராமத்தின் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், கலந்து கொண்டது முத்தாய்ப்பாக இருந்தது. 

இந்த கூட்டத்தில் சுகாதாரம், அங்கன்வாடி, விவசாயம், வருவாய் துறை  சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டது மிக சிறப்பு. கூட்டம் ஒரு மணிநேரம் கால தாமதமாக தொடங்கி, சிறிது சலசலப்பு காணப்பட்டாலும், நிறைவாக ஊராட்சி செயலர், திரு. ஆனந்தராஜ் திருப்பத்தூர் ஒன்றிய கவுன்சிலர் எம்ஜி என்கின்ற பூங்காவனம் அவர்களும் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad