தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம்!! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 May 2022

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

தமிழக முதல்வர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, CPS திட்டத்தை இரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றி நடைமுறைப்படுத்திடவும், ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பங்கேற்பு ஓய்வு திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தி திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இன்று 11/ 5/ 2022 மாலை 5 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் திரு. வி.சி.பாபு தலைமை தாங்கினார். திரு ஞானசேகரன் மாவட்ட செயலாளர் அவர்கள் சிறப்புரையாற்றினார், திருமதி. மகேஸ்வரி ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொறுப்பாளர், திருப்பத்தூர், ஆலங்காயம், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, கந்திலி, மாதனூர் வட்டார பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலங்காயம் வட்டாரச் செயலர் திரு ஜெகன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad