லாரியில் தஞ்சமடைந்த பாம்பு!!! லாவகமாக பிடித்த தீயணைப்புத்துறை!!! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 May 2022

லாரியில் தஞ்சமடைந்த பாம்பு!!! லாவகமாக பிடித்த தீயணைப்புத்துறை!!!

திருப்பத்தூர் மாவட்ட பழைய பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கான லாரி, ஆட்டோ என்று பரபரப்பாக இயங்கி வரும் இந்த வளாகத்தில், திடீரென ஒரு சாரை பாம்பு  புகுந்துவிட்டது. இதனை கவனித்த ஓட்டுநர்கள் பிடிக்க முயற்சி செய்த போது லாரியின் என்ஜின் பகுதி உள்ளே சென்று விட்டது. உடனடியாக அந்த பகுதியில் இருந்த ஓட்டுனர்கள் திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 


உடனடியாக தீயணைப்பு நிலைய அதிகாரி அசோகன் அவர்கள் தலைமையில் வந்த குழுவினர் மிகக் கடுமையான 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த சாரைப்பாம்பை நவீன கருவிகளோடு உயிருடன் மீட்டனர். பிறகு அதை பாதுகாப்பாக வனத்துக்குள் விடுவதாக தீயணைப்புத்துறையினர் எடுத்துச் சென்றனர். தீயணைப்பு நிலைய அதிகாரி அசோகன் அவர்கள் கூறியபொழுது, பாம்புகளை கண்டால் தயவுசெய்து யாரும் அடிக்க வேண்டாம்,  எங்களுக்கு தகவல் சொன்னாள் நாங்கள் அதை பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்வானது அந்த பகுதி மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. 

No comments:

Post a Comment

Post Top Ad