ஏலகிரி மலையில் தமிழ்நாடு டிஜிட்டல் பிரிண்டிங் சங்க பொதுக்குழு கூட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 May 2022

ஏலகிரி மலையில் தமிழ்நாடு டிஜிட்டல் பிரிண்டிங் சங்க பொதுக்குழு கூட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை நிலா ஒரு பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு டிஜிட்டல் பிரிண்டிங் சங்க 12ம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நிறுவனத் தலைவர் எம். சுரேஷ் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் இராம மாதவன் வரவேற்றார். இந்த விழாவிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மாநில பொருளாளர் ஏ. எம். சதக்கத்துல்லா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். 


மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் நமது தொழிலை பாதுகாத்திட பேனர் தொழிலை அனுமதிக்க வேண்டும் என ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 5ல் வணிகர் தின மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு மே ஐந்தில் வணிகர் தின மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பேரமைப்பின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் வணிகர்களின் கோரிக்கையாக இந்த அரசு ஏற்று நிறைவேற்றித் தருவதாக தெரிவித்துள்ளார். இதனால் தமிழக முதல்வருக்கும், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரம ராஜா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும், போஸ்டர்கள் ஓட்டுவதை தடை செய்துள்ள சென்னை மாநகராட்சி அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தனியார் இடங்களில் அனுமதியோடு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்புறப்படுத்த கூடாது என வலியுறுத்தியும், சென்னை மாநகராட்சி இதற்கான ஒதுக்கப்பட்ட இடங்களை தேர்வு செய்து கொடுத்து போஸ்டர் தொழில் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தமிழக அரசுக்கு கோரிக்கையும், பேனர் தொழிலை காப்பாற்ற சாலை கேப்ப அளவுகளில் விழாவிற்கு ஏற்ற எண்ணிக்கையில் பேனர்கள் வைக்க ஒழுங்குமுறை கமிட்டியை தமிழக அரசு உருவாக்கி கமிட்டியில் மாவட்டந்தோறும் உள்ள சங்க நிர்வாகிகளை கமிட்டி உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். 


அவ்வாறு செய்யும்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடையூறும் ஏற்படாமல் நடைமுறைப்படுத்த முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கொண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. மேலும் இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad