கடமைக்கு வேலை செய்யும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் மாற்றுத்திறனாளிகள் அவதி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 May 2022

கடமைக்கு வேலை செய்யும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் மாற்றுத்திறனாளிகள் அவதி.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கூடுதல் அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பாக முகாம்கள் நடைபெற்று மாற்றுத்திறனாளி இடமிருந்து மனுக்கள் பெறப்படுவது வழக்கம்.


இதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் வாரம்தோறும் மனு கொடுத்து நலத்திட்ட உதவிகள் பெறுவதற்காக கலந்து கொள்கின்றனர்.


அப்போது வளாகத்தின் வெளியே இருந்து வளாகத்திற்குள் வர முடியாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளிகளை அழைத்து வர மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாலாஜி பத்துக்கும் மேற்பட்ட சக்கர நாற்காலிகளை ஏற்பாடு செய்து வைத்திருந்தாலும் அதன் மூலம் எந்தப் பயன்பாடும் மாற்றுத் திறனாளிகளுக்கு  இல்லாததால் மேலதிகாரிகள் ஏதாவது கேள்வி கேட்டு விடுவார்களோ என்பதற்காக கடமைக்கு ஏற்பாடு செய்து வைத்திருப்பதாக கூறி முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad