கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலமாக இலவச சிறப்பு முகாம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 May 2022

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலமாக இலவச சிறப்பு முகாம்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நாயனசெருவு பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில்  கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலமாக மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம்  இலவச சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் இரத்தத்தில்  உள்ள இரும்புச் சத்து சர்க்கரை நோய் மற்றும் கொழுப்பின் அளவு ரத்த அழுத்தம் ரத்த வகையைக் கண்டறிதல் சிறுநீர் உப்பு சர்க்கரை அளவு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறப்பு பரிசோதனைகள் செய்யப்பட்டது, அதுமட்டுமின்றி சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு  ஸ்கேன் மற்றும் ஈசிஜி எடுக்க வசதி செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து ஆத்தூர் குப்பம் நாட்றம்பள்ளி மல்லகுண்டா தோப்புல குண்டா  உள்ளிட்ட ஐந்து ஊராட்சி பகுதிகளில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.


மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு குடும்ப அட்டை  பள்ளி மாணவிகளுக்கு மூக்குக்கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


மேலும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை  ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ்  மாவட்ட ஒன்றிய குழு தலைவர் சூரியகுமார் ஒன்றியக்குழு தலைவர் வெண்மதி முனுசாமி மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் வட்டார மருத்துவ அலுவலர் செல்லமுத்து ராமநாயக்கன் பேட்டை மருத்துவ அலுவலர் வித்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad