காருக்கு வழி விடாததால் அரசு பேருந்து ஓட்டுனரையும், நடத்துனரையும் தாக்கிய இளைஞர்கள். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 May 2022

காருக்கு வழி விடாததால் அரசு பேருந்து ஓட்டுனரையும், நடத்துனரையும் தாக்கிய இளைஞர்கள்.

கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூரை நோக்கி சென்ற அரசுப் பேருந்தை காரில் வந்த வாலிபர்கள் அவர்கள் கார் செல்ல வழி விடாத காரணத்தினால் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கினர், இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துபாதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூரை நோக்கி வந்த அரசு ஒண்டன்று வந்து கொண்டிருந்தது, கந்திலி அருகே சென்று பொது அந்த வழியே வந்த காருக்கு அரசசு பேருந்து ஓட்டுநர் வலி விடவில்லை என தெரிகிறது, இதனால் ஆத்திரமடைந்த காரிலிருந்து வாலிபர்கள், அந்த பபேருந்தை பின் தொடர்ந்து வந்து திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு ரவுண்டானா அருகே பேருந்தை வழிமறித்து அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை ஆபாசமா பேசி தாக்கியுள்ளனர்.

இதனை கண்ட பொதுமக்களும், பயணிகளும் அந்த வாலிபர்களிடம் கேட்டபோது அவர்களையும் ஆபாசமா பேசி தக்க முயன்றனர், பின்னர் திருப்பது காவல் நிலைய அதிகாரிகள் அந்த இளைஞர்களை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர், இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது, பின்னர் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad