ஏழுருவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு தேர்தல் கூட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 May 2022

ஏழுருவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு தேர்தல் கூட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் ஏழுருவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு தேர்தலுக்கான கூட்டம் இன்று07/05 2022 அன்று, காலை 10 மணி அளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. நிர்மலா தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தேர்தல் பார்வையாளராக கதிரம்பட்டி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திரு.ராம்குமார் அவர்கள், கலந்து கொண்டார். 


இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, பொம்மிகுப்பம் ஊராட்சிமன்ற தலைவர், திருமதி. தேன்மொழி வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் எம்ஜி (எ) பூங்காவனம் துணைத் தலைவர் திரு. சிவகுமார், திருப்பத்தூர் மாவட்ட இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ராதாகிருட்டிணன் வார்டு உறுப்பினர்கள் திரு. சரத்குமார், திருமதி. சுகந்தி சுரேஷ், பூவறும்புசர்வேசன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இல்லம் தேடி கல்வி கலைக்குழு சார்ந்த திருமதி. மேகலா விஜயகாந்த் செல்வி. தீபா பள்ளி மேலாண்மை குழு புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட தலைவர், திருமதி. சாந்தி துணைத் தலைவர், வளர்மதி சர்வேசன் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முடிவில், ஆசிரியர் பார்த்தீபன் அவர்கள் நன்றி கூறினார். திரளாக குழந்தைகளின் பெற்றோர்கள்& பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad