வாணியம்பாடி அருகே நடைப்பெற்ற எருது விடும் விழா, ஏராளமான எருதுகள் பங்கேற்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 June 2022

வாணியம்பாடி அருகே நடைப்பெற்ற எருது விடும் விழா, ஏராளமான எருதுகள் பங்கேற்பு.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தும்பேரி கிராமத்தில் நேரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக மாபெரும் எருது விடும் விழா இன்று நடைப்பெற்றது.


இந்த எருது விடும் விழாவில் ஆந்திரா, வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன, கால்நடை மருத்துவர்களின் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவிழ்த்துவிடப்பட்ட எருதுகளில் குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த எருதிற்கு முதற் பரிசாக 66666 ரூபாயும், இரண்டாவது பரிசாக 55555 ரூபாயும், மூன்றாவது பரிசாக 44444 ரூபாயும் என மொத்தம்  52 பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் இந்த எருதுவிடும் விழாவினை காண கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad