இடியும் நிலையில் உள்ள அரசு பள்ளியை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 9 May 2022

இடியும் நிலையில் உள்ள அரசு பள்ளியை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

 திருப்பத்தூர் மாவட்டம், பொம்மிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது, இந்த பள்ளியில் சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.

தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்கள், அரசு பள்ளிகள் மீது தனி கவனம் எடுத்து பல்வேறு சிறப்பான பணிகளை செய்து வருகின்ற இந்த வேலையில், ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் படித்த இந்த பள்ளி தற்பொழுது வெறும் 25 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 

இந்த நிலைமையை முன்னாள் மாணவரும் பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருட்டிணன் முயற்சி எடுத்து அந்த பகுதியைச் சார்ந்த சமூக ஆர்வலர் வேலுமணி, சுதாகர், நல்லாசிரியர் அரங்கசாமி, முன்னாள் மாணவர்கள், முருகன், பார்த்திபன், ஊர் பொதுமக்கள் உதவியால் சுமார் 30 ஆண்டுகாலம் அந்த பள்ளிக்கு வாயிற்கதவு இல்லாமல் இருந்தை அறிந்து பல ஆயிரம் ரூபாய்வழங்கி மாணவ- மாணவிகளின் பாதுகாப்புக்காக வாயிற்கதவு அமைத்து கொடுத்தனர். ஆனாலும் 24 மணி நேரமும் திறந்தே கிடக்கிறது இதனால் சமூக விரோத செயல்கள் நடைபெறும் என்ற அச்சமும் ஏற்படுகிறது.
இப்படி பல்வேறு உதவிகள் செய்தும் அந்த பள்ளி தலைமையாசிரியரின் மெத்தன போக்கால் கழிப்பறை, மற்றும் சுற்றுசுவர் போன்ற கட்டிடங்கள் பழுதடைந்து, எப்போது இடிந்து விழுமோ என்ற அபாயமான கட்டத்தில் உள்ளது. இதனால் அந்த பிஞ்சு குழந்தைகளின் உயிருக்கும் உத்தரவாதம்இல்லாத நிலையில் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


மாவட்ட ஆட்சியர் உயர்திரு. அமர்குஷ்வாகா அவர்களும், பள்ளிக் கல்வித்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து அந்த மாணவர்களின் நலனை காக்க வேண்டும் என்பதே அனைத்து மக்களின் கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad