திருப்பத்தூர் அருகே சுமார் 12 சவரன் நகை கொள்ளை போன சம்பவத்தால் பரபரப்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 June 2022

திருப்பத்தூர் அருகே சுமார் 12 சவரன் நகை கொள்ளை போன சம்பவத்தால் பரபரப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த 15-ஆவது வார்டு வள்ளுவர் நகர் பகுதியில் வசிப்பவர் முருகன் (45) இவரது மனைவி கலைச்செல்வி (36), இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.


இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நாட்றம்பள்ளி அருகே உள்ள பெருமாள் கோவிலுக்கு தன்னுடைய பெண் குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதற்காக சென்று வந்த இருவரும் வீட்டிற்கு வந்தவுடன்  கலைச்செல்வி தன்னுடைய 12 சவரன் நகைகள் அனைத்தையும் பீரோவில் கழற்றி வைத்துள்ளனர்.

பின்பு அதைப் பற்றி எதுவும் கவனிக்காமல் விட்டு விட்ட நிலையில் இன்று திடீரென எதேச்சையாக பீரோவை பரிசோதித்துப் பார்த்ததில் நகைகள் அனைத்தும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


பின்பு சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கூறியதின் அடிப்படையில் ஜோலார்பேட்டை காவல் துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad