இதன்காரணமாக வருகின்ற ஜூலை இருபத்தி ஒன்றாம் தேதி திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை புரிந்து திறந்து வைத்த நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.
இதன் காரணமாக ஏலகிரி மலைவாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ள ஜாதி சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம் நடத்தி மனுக்கள் பெறப்பட்டன, இதில் சுமார் 700க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் ஜாதி சான்றிதழ் கேட்டு மனுக்கள் பெறப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அரசு அதிகாரிகள் எங்களிடம் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டுமென்றால் வீட்டு பட்ட கொடுத்தால் மட்டுமே ஜாதி சான்றிதழ் வழங்க முடியும் என கூறிவருகின்றனர்.
முதலமைச்சர் எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கூறியும் பல அரசு அதிகாரிகள் தங்களிடம் வீட்டுமனை பட்டா கேட்டு வருகின்றனர், இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு தங்களுக்கு உடனடியாக ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமி, வாட்டாச்சி சிவப்பிரகாசம், வருவாய் அலுவலர் ரவிமாராஜன், கிராம நிர்வாக அலுவலர் மஸ்தான், ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment