70 ஆண்டுகள் பழமையான ஶ்ரீ திருப்பதி கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 2 June 2022

70 ஆண்டுகள் பழமையான ஶ்ரீ திருப்பதி கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.

வாணியம்பாடி அருகே 70 ஆண்டுகள் பழமையான  ஶ்ரீ திருப்பதி கங்கையம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர், மகாதேவமலை மகானந்த சித்தர், விபூதி சுவாமிகள் பங்கேற்பு


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த  மதனாஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள 70 ஆண்டுகள் பழமையான மிகவும் பிரசித்தி பெற்ற ஶ்ரீ திருப்பதி கங்கையம்மன் கோவில்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது.அந்த கோவில்  தற்போது புதியதாக மிகவும் உயரமான ராஜகோபுரம் கட்டப்பட்டு அதற்கான கும்பாபிஷேக விழா தொடர்ந்து  இரண்டு நாட்கள்நடைபெற்றது. 


இந்த கும்பாபிஷேக  விழாவில் கணபதி பூஜை, கோ பூஜை,விக்னேஸ்வர பூஜை,நாதஸ்வர இன்னிசை பம்பை முழக்கத்துடன் தாய்வீட்டு சீர்வரிசை எடுத்துச் சென்று இரண்டாம் கால பூஜையுடன் மிகவும் பிரம்மாண்டமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மிகவும் பிரசித்தி பெற்ற மகாதேவ மலை விபூதி சுவாமிகள், சித்தர் சுவாமிகள், பகவதி சித்தர் சுவாமிகள் பங்கேற்று கும்பாபிஷேக விழாவினை நடத்தினர்.


இந்த விழாவில் வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம், திருப்பத்தூர் உட்பட பல்வறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad