ஆம்பூரில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் காளியம்மன் கோவில் நிர்வாகத்தினரிடையே கடும் வாக்குவாதம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 3 June 2022

ஆம்பூரில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் காளியம்மன் கோவில் நிர்வாகத்தினரிடையே கடும் வாக்குவாதம்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகர்பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர்  தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் அமைக்கப்பட்டுள்ளது காமராஜர் சிலை, இந்நிலையில் நெடுஞ்சாலை துறையினர் ஆம்பூர் பகுதியில் மேம்பாலம் அமைக்க சாலை விரிவாக்க பணிக்காக காமராஜர் சிலையை அப்புறபடுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் காமராஜர்  சிலையை அருகில்  மற்றொரு இடத்தில் வைக்க ஏற்பாடுகள் செய்து அதற்கான பணிகளில் ஈடுப்பட்ட போது, சிலை வைக்க தேர்ந்தெடுத்த இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காளியம்மன் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான இடம்  எனவும் இங்கு சிலையை வைக்க கூடாது என கோவில் நிர்வாகத்தினர் காங்கிரஸ் கட்சியினரிடம் கடும்  வாக்குவாதத்தில்  ஈடுப்பட்டனர்.

இதனை தொடர்ந்து இருதரப்பினரிடமும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு காமராஜர்  சிலையை மற்றொரு இடத்தில் அமைக்க  முடிவு செய்தனர், இதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையின் மற்றொரு பகுதியில் காமராஜர் சிலை அமைக்கம் பணிகள் நடைப்பெற்று வருகிறது. தேசிய தலைவர் சிலையை அமைக்க இருதரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad