மனைவியுடன் சேர்ந்து வாழ ராணுவ வீரர் விரும்பியதால் கள்ளக்காதலி தூக்கிட்டு தற்கொலை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 June 2022

மனைவியுடன் சேர்ந்து வாழ ராணுவ வீரர் விரும்பியதால் கள்ளக்காதலி தூக்கிட்டு தற்கொலை.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி  பகுதியில் வசிப்பவர் ராஜா நவநீதம் மகன் பிரபாகரன் (23), இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.


இந்நிலையில் திருப்பத்தூர் நகர பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி மகள் நிவேதா (22) என்பவருக்கும் ராணுவ வீரர் பிரபாகரனுக்கும்  பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது, இதனைத் தொடர்ந்து திருமணமாகி ஒரு வருடத்திற்குள்ளாக அதே பகுதியை சேர்ந்த பழனி தீபாவதி மகள் சரிகா (20) என்பவருடன் பிரபாகரனுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.


இந்த தகவலை அறிந்த பிரபாகரனின் முதல் மனைவி நிவேதா பெற்றோர்களிடம் புகார் தெரிவிக்க ஊர் பெரியவர்கள் முன்னிலையில் சமரசம் பேசியுள்ளனர். பின்பு இது குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலைத்தில் புகாரும் அளித்துள்ளார்.


ஆனால் யாருக்கும் பிரபாகரன் கட்டுப்படாததால் முதல் மனைவி நிவேதா பிரபாகரனை விட்டு விலகியுள்ளார், இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பிரபாகரன் தன்னுடைய கள்ளக்காதலி சரிகாவுடன் ராணுவத்திற்கு செல்லாமல் கடந்த இரண்டு வருடமாக அதே பகுதியில் குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து திடீரென முதல் மனைவி நிவேதாவுடன் பிரபாகரனுக்கு தொடர்பு ஏற்பட்டவுடன் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது, இதனை அறிந்த கள்ளக்காதலி சரிகா தன்னுடைய எதிர்காலம் பாழாகிவிடுமோ என்கிற கலக்கத்தில் மனமுடைந்து வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜோலார்பேட்டை காவல் துறை சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad