முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 பிறந்தநாளை முன்னிட்டு மலர்தூவி இனிப்பு வழங்கி கொண்டாடினர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 June 2022

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 பிறந்தநாளை முன்னிட்டு மலர்தூவி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்  அவர்களின் 99 பிறந்தநாளை முன்னிட்டு மலர்தூவி  இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

திருப்பத்தூர் நகர பஸ் நிலையம் லட்சுமி கேப் அருகில் இருந்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 99 பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஊர்வலமாக சென்று சீனிவாசா கேப் அருகில் உள்ள அண்ணா சிலை மற்றும் கலைஞர் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது, இதில் பொதுமக்களும் திராவிட கழக உறுப்பினர்களும் கழக நிர்வாகிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் இதை முன்னெடுத்து திருப்பத்தூர் நகர கழக தலைமையில், எஸ் ஆர் ராஜேந்திரன் எம் ஐ பி எல் சிறப்பாக நடத்தி வைத்தார்,  இதில் சோலையார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.க.தேவராஜ் MLA அவர்கள் கவந்துக் கொண்டு சிறப்புறையாற்றினார்.

நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு A.நல்லதம்பி MLA அவர்களும், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திரு,NKR.சூரியகுமார் EX.MLA அவர்களும், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் KS.அன்பழகன் அவர்களும், மற்றும் நகர கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், முன்னாள் இன்னால் நகர மன்ற உறுப்பினர்கள், இலக்கிய அணி, வழக்கறிஞர் அணி மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, வர்த்தக அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர்கள் அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, சிறுபான்மையினர் நல பிரிவு அணி, நெசவாளர் அணி, தொ.மு.ச தோழர்கள், தகவல் தொழில் நுட்ப அணி, பொறியாளர் அணி, ஆதிதிராவிட நலக்குழு அணி, கலை-இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் கழக முன்னோடிகள் கலந்துக் கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad