உதவி ஆய்வாளர் தேர்வு எழுதும் ஆயுதப்படை காவலர்களுக்கு வழங்கப்பட்டது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 June 2022

உதவி ஆய்வாளர் தேர்வு எழுதும் ஆயுதப்படை காவலர்களுக்கு வழங்கப்பட்டது.

உதவி ஆய்வாளர் தேர்வு எழுதும் ஆயுதப்படை ஆளினர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக பயிற்சிப் புத்தகம் வழங்குதல் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் திறப்பு விழா  நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதும் 70 ஆயுதப்படை ஆளினர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக பயிற்சி புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது .

ஆயுதப்படை மைதானத்தில் மொத்தம் 224 ஆயுதப்படை காவலர்கள் உள்ள நிலையில் 70 காவலர்கள் இந்த மாதம் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் நடைபெற உள்ள உதவி காவல் ஆய்வாளர் பதவிக்கு தேர்வு எழுத உள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு தேவைப்படும் தேர்வு பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டன.

மேலும் ஆயுதப்படை ஆளினர்களின் உடல் நலன் கருதி காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்களால் வழங்கப்பட்ட  உடற்பயிற்சி கூடம் திறந்து வைக்கப்பட்டது, இந்த விழாவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் குமார், முத்துமாணிக்கம்  மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் கணேஷ், தங்கதுரை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad