புகைப்படத்திற்காக மட்டும் குப்பைகளை சுத்தம் செய்துவிட்டு சென்ற மக்கள் பிரதிநிதிகள்.தொடர்ந்து குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சித்தலைவர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 June 2022

புகைப்படத்திற்காக மட்டும் குப்பைகளை சுத்தம் செய்துவிட்டு சென்ற மக்கள் பிரதிநிதிகள்.தொடர்ந்து குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சித்தலைவர்.

என் குப்பை என் பொறுப்பு திட்டத்திற்காக புகைப்படத்திற்காக மட்டும் குப்பைகளை சுத்தம் செய்துவிட்டு சென்ற மக்கள் பிரதிநிதிகள்.தொடர்ந்து குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சித்தலைவர்.


மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையிலிருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் என் குப்பை என் பொறுப்பு என்கிற திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.

தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் அவரவர் பகுதியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஏரிக்கரை பகுதியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஒன்றியக்குழு தலைவர் சூரியகுமார் நகர செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் நகரமன்ற உறுப்பினர்கள் குப்பைகளை சுத்தம் செய்து அப்புறப்படுத்தினர்.


சிறுது நேரம் குப்பைகளை சுத்தம் செய்த பின்னர் போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டுச் சென்ற மக்கள் பிரதிநிதிகளை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மட்டும் நகராட்சி துப்புரவு பணியாளர்களுடன் நீண்ட நேரம் குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து நகராட்சியின் மூலமாக துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஜேசிபி கனரக வாகனத்தை கொண்டும் தீயணைப்புத் துறையின் சார்பாக படகு மூலமாகவும் ஏரிக்கரை முழுவதும் தொடர்ந்து சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. No comments:

Post a Comment

Post Top Ad