கந்திலி அருகே இந்த வருடத்திற்கான இறுதி எருது விடும் திருவிழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 June 2022

கந்திலி அருகே இந்த வருடத்திற்கான இறுதி எருது விடும் திருவிழா நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், கந்திலி அடுத்த  கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் தலைமையில்  எருது விடும் திருவிழா நடைபெற்றது.


இவ்விழாவை சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார், திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்த இந்த எருது விடும் திருவிழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழாக்குழுவினர் நிர்ணயித்த குறிப்பிட்ட எல்லையை குறைந்த நேரத்தில் கடந்த காளைகளுக்கு முதல் பரிசாக 1,22,222 ரூபாய் முதல் மொத்தம் 81 பரிசுகள் வழங்கப்பட்டன, அரசு வழிகாட்டுதலுடன் மருத்துவ பரிசோதனை மற்றும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கந்திலி காவல் ஆய்வாளர் பழனி உங்கள் மேற்பார்வையில்  சுமார் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த எருது விடும் திருவிழா இந்த ஆண்டிற்கான இறுதியான விழா என்பதால் இன்றுடன் இதுபோன்ற எருதுவிடும் திருவிழாக்கள் நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad