இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய துணை காவல் கண்காணிப்பாளர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 June 2022

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய துணை காவல் கண்காணிப்பாளர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலை புதுப்பேட்டை ரோட்டில்  இருசக்கர  வாகன ஓட்டிகளுக்கு கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வரவேண்டும் எனவும் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதை   தவிர்க்க வேண்டுமென துணை காவல் கண்காணிப்பாளர் கணேசன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 


மேலும் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனங்கள் 15க்கும் மேற்பட்டவர்கள் வாகனங்கள்  பறிமுதல் செய்யப்பட்டது. இருசக்கர வாகனங்களை அவர்களின் பெற்றோர்கள் வந்தால் மட்டுமே தரப்படும் என காவல்துறையினர் அவர்களிடம் தெரிவித்தனர். மேலும் இனி வரும் காலங்களில் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். 


இல்லையெனில்  வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். உடன் நகர காவல் ஆய்வாளர் ஹேமாவதி மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad