பல லட்சம் மதிப்பிலான கணவரின் சொத்தை முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாம் மனைவிக்கு பதிவு செய்து கொடுத்த சார் பதிவாளர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 June 2022

பல லட்சம் மதிப்பிலான கணவரின் சொத்தை முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாம் மனைவிக்கு பதிவு செய்து கொடுத்த சார் பதிவாளர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கௌதம் பேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர் இவர் கடந்த வருடம் கொராணா நோய் தொற்றால் இறந்து விட்டார், இவருடைய முதல் முதல் மனைவி சாந்தி (52) இவருக்கு ஜெயச்சந்திரன், ஷகிலா, பிரபாகரன், அரவிந்தன், என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.


இரண்டாம் மனைவியான வசந்தா (60) இவருக்கு இளஞ்செழியன், ஷர்மிளா, சுபா என மூன்று பிள்ளைகள் உள்ளனர், இந்தநிலையில் சங்கர் இறந்ததன் காரணமாக அவருடைய பெயரில் ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள 5728 சதுர அடியில் உள்ள சொத்தை இரண்டாம் மனைவியான வசந்தா, முதல் மனைவி மற்றும் அவருடைய பிள்ளைகளுக்கு தெரியாமல் திருப்பத்தூர் சார் பதிவாளர் ராதிகா ( பொறுப்பு) உடந்தையுடன் கடந்த 25 ஆம் தேதி பதிவு செய்துள்ளார்.


இதுகுறித்து முதல் மனைவி மற்றும் அவருடைய பிள்ளைகளும் சார் பதிவாளர் ராதிகாவை கேட்கும்பொழுது முறையான பதில் அளிக்காமலும் அதிகாரத் திமிரிலும் பேசியுள்ளார். அதன் காரணமாக இன்று சாந்தி மற்றும் அவருடைய நான்கு பிள்ளைகளும் ஒன்றிணைந்து எங்களுக்கு தெரியாமல் பதிவு செய்த பத்திர ஆவணத்தை நீக்கக்கோரி முறையிட்டனர்.

மேலும் முதல் மனைவிக்குத் தெரியாமல் நிலத்தைப் பதிவு செய்து கொடுத்த சார்பதிவாளர் மீது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர், இல்லாவிடில் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக தகவல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Top Ad