நல்வாழ்வு மைய அறக்கட்டளை அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 June 2022

நல்வாழ்வு மைய அறக்கட்டளை அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஆசிரியர் நகரில் நல்வாழ்வு மையம் அறக்கட்டளை சார்பாக பலமுறை நிவாரண பொருட்கள் மற்றும் மரக்கன்றுகள் நடுவது இதுபோன்ற செயல்களை செய்து வரும் தருணத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு முதியோர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் இன்று வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர், திருப்பத்தூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மற்றும் ஏ கே மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பு. வேலு எய்ட்ஸ் நோய் தடுப்பு  அலுவலர் தாய் விழுதுகள் அறக்கட்டளை மேனேஜர் திரு. சந்துரு, நிவாரண பொருட்கள் வழங்கிய வள்ளிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியம் தனம், நல்வாழ்வு மையம் அறக்கட்டளை நிறுவனர் நளினி, தமிழ் வளம் அறக்கட்டளை நிறுவனர் தமிழ்மொழி கிருஷ்ணன், திரு அருள்தாஸ், சமூக சேவகர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர் என குறிப்பிடதக்கது

No comments:

Post a Comment

Post Top Ad