திருப்பத்தூர் ஆண்டியப்பணூரில் அணை அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு நிவாரணம் வழங்கவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் சுற்று வட்டார பகுதியில் இருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர்' இந்த நிலையில் இப்போது விவசாயிகள் ஆண்டியப்பனூர் அணை கட்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் 2001ஆம் ஆண்டு தோராய மதிப்பு 7 கோடி அளவில் அரசு நிர்ணயித்த தொகையில் பட்டா நிலம் கொண்ட சுமார் 500க்கும் மேற்கொண்ட விவசாயிகள் இடம் கொடுத்துள்ளார்கள்.
இந்த நிலையில் அதற்கான தொகையை அரசு கொடுப்பதாகவும் ஆனால் இதுவரை கொடுக்கவில்லை அதனை உடனடியாக தற்போது அந்த ஏக்கர் எவ்வளவு தொகை போகுமோ அதற்கான தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென முற்றுகையிட்டனர்.
அப்போது பேச்சுவார்த்தை நடத்தி இதை உடனடியாக செய்து கொடுக்குமாறு கோரிக்கை வைத்தனர், உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சரி செய்வதாக உத்தரவிட்டார்கள், இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment