விபத்தில் மரணமடைந்த விவசாயி உடலை ஊருக்குள் கொண்டு வர கிராம மக்கள் தடை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 19 June 2022

விபத்தில் மரணமடைந்த விவசாயி உடலை ஊருக்குள் கொண்டு வர கிராம மக்கள் தடை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்ன கல்லுபள்ளி கிராமத்தில் உள்ள திருப்பதி வட்டத்தில் வசித்து வரும் விவசாயி ஜெயராமன். இவர் தனது நிலத்தில் நெற்று காலை தேங்காய் பறிக்க மரம் ஏறிய போது வழுக்கி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டு வேலூர்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 


இந்நிலையில் இன்று மாலை மூச்சுத் திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி ஜெயராமன் உயிரிழந்தார். இவரது உடலை பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் உடலை தனது சொந்த ஊருக்கு கொண்டு வந்த நிலையில் வீட்டில் வைத்து இறுதி சடங்கு செய்து ஊரில் உள்ள அவரது விவசாய நிலத்திலேயே அடக்கம் செய்ய  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். 

இந்நிலையில் அந்த பகுதியில்  சுடுகாடு இல்லாத ஒரே காரணத்தால்  குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள நிலத்தில் அடக்கம் செய்ய அனுமதித்தால் துஷ்ட சக்திகள் புகுந்து  துர்மரணங்கள் தொடரும் என கூறி ஊர்மக்கள் மூடநம்பிக்கையில் அவரது சடலத்தை ஊருக்குள் அனுமதிக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சென்ற வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் இருதரப்பினரிடையே நடத்திய பேச்சு வார்த்தை முடிவுக்கு வராததால் மாலை 6 மணிக்கு மேல் சடலத்தை வைத்திருக்க முடியாத நிலையில் சின்ன கல்லு பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக சாலையில் சடலத்தை வைத்து இறுதி சடங்கு செய்து பக்கத்து ஊரில் உள்ள தகன மைதானத்தில் வைத்து சடலத்தை தகனம் செய்தனர்.


அந்த கிராமத்தில் சுடுகாடு இல்லாத காரணத்தால் இறந்தவரின் சடலத்தை தனது சொந்த நிலத்தில் கூட அடக்கம் செய்ய முடியாமல் அவரது உறவினர்கள் பக்கத்து ஊருக்கு கொண்டு சென்று சடலத்தை தகனம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad