இருசக்கர வாகனம் மீது ரிவர்சில் வந்த லாரி மோதி விபத்து இளைஞர் படுகாயம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 June 2022

இருசக்கர வாகனம் மீது ரிவர்சில் வந்த லாரி மோதி விபத்து இளைஞர் படுகாயம்.

திருப்பத்தூர் மாவட்டம்  ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை  விரிவாக்கப் பணிகளுக்காக கட்டுமான பொருட்களை சேமித்து  வைத்துள்ள கிடங்கிற்கு கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த  லாரி ஒன்று கிடங்கை தாண்டி  சிறிது தூரம்  கடந்து சென்றதால் லாரி ஓட்டுனர் லாரியை பின்னோக்கி  (ரிவர்ஸில்) இயக்கி உள்ளார்.


இதனை  பார்க்காமல் பின்னால் இருசக்கர வாகனத்தில்  வந்து கொண்டிருந்த  இளைஞர் ஹரி என்பவர்  மீது லாரி மோதியுள்ளது, இதில் இருசக்கர வாகனம் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த மின்னூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான இளைஞர் ஹரி என்பவர் படுகாயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய லாரி பறிமுதல் செய்து தப்பி ஓடிய ஓட்டுனர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad