நகராட்சி ஆணையர் போல் கையொப்பமிட்டு போலி ஆவணங்கள் தயாரித்து மின் இணைப்பு பெற முயன்ற இரு பெண்கள் மீது காவல்நிலையத்தில் புகார், - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 3 June 2022

நகராட்சி ஆணையர் போல் கையொப்பமிட்டு போலி ஆவணங்கள் தயாரித்து மின் இணைப்பு பெற முயன்ற இரு பெண்கள் மீது காவல்நிலையத்தில் புகார்,

வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட புதூர் பகுதியை சேர்ந்த மலர்க்கொடி மற்றும் பொற்கொடி ஆகிய இருவரும், புதூர்  பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள  லுத்தரன் சென்டர் பகுதியில்  இரண்டு அடுக்கில் ஒன்பது கடைகள் கொண்ட வணிக வளாகம் ஒன்றை கட்டியுள்ளனர்.

மேலும் வணிக வளாகத்திற்கு மின் இணைப்பு வேண்டி, நகராட்சி அலுவலகத்தில்   வணிக வளாகத்திற்கு சொத்துவரி செலுத்தியதாகவும், மின் இணைப்பு பெற நகராட்சியின் ஆட்சேபனை இல்லை என  வாணியம்பாடி நகராட்சி ஆணையர் ஸ்டான்லி பாபு போல் போலி கையொழுத்திட்டு போலி  ஆவணங்கள்  தயாரித்து வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில்  போலியான சான்றிதழ்களை அளித்துள்ளனர்.

மேலும்  இந்நிகழ்வு குறித்து அறிந்த வாணியம்பாடி நகராட்சி ஆணையர் ஸ்டான்லி பாபு வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் நகராட்சி ஆணையர் போல் போலி கையொழுத்திட்டு ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  புகார் அளித்துள்ளார், புகாரின் பேரில் வாணியம்பாடி நகர காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad