ஆம்பூர் அருகே காணமல் போன இளைஞர் கிணற்றில் சலடமாக மீட்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 June 2022

ஆம்பூர் அருகே காணமல் போன இளைஞர் கிணற்றில் சலடமாக மீட்பு.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த உமராபாத்  பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் இவரது மகன்  புவனேஸ்வரன் (22), இவர் உமராபாத் பகுதியில் தனது தந்தை நடத்தி வரும் சிமென்ட் கடையில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் சீனிவாசனுக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது, இதனால் தனது மகனை அடிக்கடி திட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 31 ஆம் தேதி இரவு 9 மணியளவில் புவனேஸ்வரன் தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்,  இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் புவனேஸ்வரின் பெற்றோர்  உமராபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்து பின்னர், அவரை தேடும் பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

அப்பொழுது  உமராபாத் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மையான கிணற்றின் அருகே புவனேஸ்வரினின் கண்ணாடி மற்றும் காலணி இருப்பதை கண்டு புவனேஸ்வரன்  கிணற்றில் குதித்திருப்பாரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு நேற்று காலை 10 மணி முதல் ஆம்பூர் தீயணைப்பு துறையினர் 60 அடி ஆளமுள்ள கிணற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுப்பட்டனர்,

ஆனால் கிணற்றில் அதிக அளவு நீர் இருந்ததால் 4 மின் மோட்டர்கள் மூலம் நீரை வெளியேற்றி இரவு 7 மணி வரை புவனேஸ்வரனை தேடும் பணியில் ஈடுப்பட்டனர், ஆனால்   நெடுநேரம் ஆகியும் உடல் கிடைக்காததால் தீயணைப்பு துறையினர் உடலை தேடும் பணியை கைவிட்டனர்,


இந்நிலையில் இன்று காலை அதே கிணற்றில் புவனேஸ்வரினின் உடல் மிதந்ததை கண்ட அவரது உறவினர்கள் உடனடியாக இதுகுறித்து உமராபாத் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கிணற்றில் இருந்து உடலை மீட்டு பிரேத  பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, இந்நிகழ்வு குறித்து வழக்குபதிவு செய்து   புவனேஸ்வரன் தொழில் நஷ்டத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறேதனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்க்கொண்டு  வருகின்றனர்.


காணாமல் போன இளைஞர் 36 மணி நேரத்திற்கு பிறகு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad