திருப்பத்தூரில் கலை பண்பாட்டுத்துறை& திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சார்பில் இளம் கலைஞர்களுக்கான கலைப்போட்டிகள் நடைபெற்றது!!! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 June 2022

திருப்பத்தூரில் கலை பண்பாட்டுத்துறை& திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சார்பில் இளம் கலைஞர்களுக்கான கலைப்போட்டிகள் நடைபெற்றது!!!

கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளம் கலைஞர்களை கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்திட 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளம் கலைஞர்களுக்கு மாவட்ட/மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது. குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான போட்டிகள் 07.06.2022 அன்று திருப்பத்தூர், வி.பி.சிங் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


இப்போட்டியில் மாவட்டம் முழுவதிலிருந்து 79 இளம் கலைஞர்கள் பங்கு பெற்றனர். கருவியிசைப்போட்டியில் ர.கோவிந்தராஜ் (நாதஸ்வரம்), பா.பிரபு (தவில்), ராசுமன் (தவில்) பரதநாட்டியப்போட்டியில் எஸ்,ஸ்ரீநிதி ஐயர், ரெனி,சி, பால், எஸ்.சந்தியா, குரலிசைப்போட்டியில் வி.சரண்யா, ரஞ்சனி, கிராமிய நடனப்போட்டியில் பருமரேசன் (காவடியாட்டம், ரெ ரஜினி (தப்பாட்டம்), இர, ஜான்சி (கரகாட்டம்) ஓவியப்போட்டியில் ரா,ஸ்ரீகாந்த், அ.முரளிகுமார் வெற்றிபெற்றனர். முதல் பரிசு ரூ.5,000 இரண்டாம் பரிசு ரூ.4,500 முன்றாம் பரிசு ஆகியோர் ரூ.3,500 அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது. பங்கு பெற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல் பரிசு பெற்ற 5 இளம் கலைஞர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள்.


இப்போட்டிக்கு கிருஷ்ணகிரி மு. திரிவேணி, வே, கல்யாணகுமார், மு. கருணா, வ.சி. சீனிவாசன் மற்றும் மதுரை கோ, செந்தமிழ்செல்வன் ஆகியோர்கள் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். இக்கலைப் போட்டிகளை கலை பண்பாட்டுத்துறை. காஞ்சிபுரம், மண்டல உதவி இயக்குநர் பா,ஹேமநாதன் அவர்கள் ஒருங்கிணைத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad