மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 June 2022

மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை G. O. (Ms). No. 259 Home(Police-XIII) Department, Dated 30.05.2022 ஆணைக்கிணங்க திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன்.,BVSc அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில்  இன்று (08/06/2022) பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் கலந்துகொண்டனர். குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குறைகளை நேரடியாக கேட்டதுடன் அவர்களின் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர் களுக்கு அறிவுரை வழங்கினர். 


மாவட்ட காவல் அலுவலகத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் புதன்கிழமைகளில் நடைபெறும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad