காரில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 31 July 2022

காரில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே திம்மாம்பேட்டை- கொல்லப்பள்ளி செக்போஸ்ட் பகுதியில் புதுச்சேரி பதிவு எண் கொண்ட கார் ஒன்று சாலை ஓரம், பல மணி நேரமாக நின்று கொண்டு இருப்பதாக வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணிக்கு தகவல் கிடைத்தது. 


அதன் பேரில் வட்ட வழங்கல் அலுவலர் சிலம்பரசன் தலைமையிலான வருவாய்த்துறையினர் சென்று அங்கு நின்று கொண்டிருந்த காரை சோதனை மேற்கொண்டனர்.  அப்போது காரில் 500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காருடன், ரேஷன் அரிசி பறிமுதல் செய்து அரிசியை வாணியம்பாடியில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபகிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 


இதேபோல் வாணியம்பாடியை அடுத்த ஜப்ராபாத் பகுதியில் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது ஒரு வீட்டின் திண்ணையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 20 மூட்டைகளில் இருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். 


இது தொடர்பாக வேலூர் மாவட்ட உணவுப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad