விவசாயிகளுக்கான மின் சிக்கன விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 31 July 2022

விவசாயிகளுக்கான மின் சிக்கன விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டம் சார்பில் விவசாயிகளுக்கான மின் சிக்கனம் மற்றும் மின் திறன் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.


முகாமுக்கு மேற்பார்வை பொறியாளர் மா. பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். செயற்பொறியாளர்கள் ராணி (பொது), பாஷா முஹம்மத் (வாணியம்பாடி), விஜயகுமார் (பள்ளிகொண்டா), மா.சுப்ரமணி (திருப்பத்தூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி பொறியாளர் சாமுவேல் வரவேற்றார்.


முகாமில் முதுநிலை மேலாளர் ரேணுகா, இளநிலை பொறியாளர் ஆர்.குமார், ஜோஸ்வா ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்று மின்சாரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும், ஸ்டார் குறியீடு கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்த வேண்டும், தேவையான நேரத்தில் மட்டும் மின் மோட்டார்களை இயக்க வேண்டும், சோலாரை பயன்படுத்தி விவசாயம் செய்வது எப்படி, பாதுகாப்பு விதிமுறைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.


பயிற்சி முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மேற்பார்வை பொறியாளர் மா.பன்னீர் செல்வம் பச்சை நிற சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார். அதில் மின்சாரத்துறை உதவி பொறியாளர்கள், வணிக ஆய்வாளர்கள் உதவியாளர்கள் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


முகாமை வாணியம்பாடி மின் பகிர்மான உதவி செயற் பொறியாளர்கள் ஏ.இக்பால் அஹ்மத், கந்தன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். முடிவில் குடியாத்தம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் வெங்கடாசலபதி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad