பொம்மிகுப்பம் கிராமத்தில் பள்ளி மேலாண்மை குழு தேர்வு கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 July 2022

பொம்மிகுப்பம் கிராமத்தில் பள்ளி மேலாண்மை குழு தேர்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம், பொம்மிகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு தேர்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர், திரு. மதிவன்ணன் அவர்கள் தலைமை தாங்கினார். தேர்தல் பார்வையாளராக திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. சங்கர் அவர்கள் கலந்து கொண்டார். சிறப்பு அழைப்பாளராக பொம்மிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவி, திருமதி. தேன்மொழி வெங்கடேசன் அவர்கள் கலந்து கொண்டார். 


ஊராட்சி செயலாளர் ஆனந்த்ராஜ், இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் விஜயகுமார், துணை செயலாளர்,வாதாபி துணைத் தலைவர் பழனி, வார்டு உறுப்பினர்கள் கீதா பூபாலன்  சுகந்திசுரேஷ், பூவரம்புசர்வேசன், இல்லம் தேடி கல்வி மாவட்ட கலைக்குழுவை சார்ந்த தீபா, அன்பழகன் உட்பட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்வில், பள்ளி மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் ஏராளமானார் கலந்து கொண்டனர்.


பள்ளி மேலாண்மை குழு தேர்தல் விதிமுறைகள் பற்றி பெற்றோர்களுடைய எடுத்துரைக்கப்பட்டது அதன் பிறகு பெற்றோர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களை தேர்வு செய்தனர். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் குழு தலைவராக திருமதி. மேகலா விஜயகாந்த் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். 


துணைத் தலைவர், கல்வியாளர், உறுப்பினர்கள் என்று அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad