நல்வாழ்வு மையம் அறக்கட்டளை சார்பாக நிவாரண பொருட்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 July 2022

நல்வாழ்வு மையம் அறக்கட்டளை சார்பாக நிவாரண பொருட்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அசோக் நகர் உயர்நிலைப் பள்ளியில் நல்வாழ்வு மையம் அறக்கட்டளை சார்பாக நிவாரண பொருட்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட ஆசிரியர் நகருக்கு அடுத்த அசோக் நகர் உயர்நிலைப் பள்ளியில் நல்வாழ்வு மையம் அறக்கட்டளை சார்பாக 50 நபர்களுக்கு  நிவாரண பொருட்கள், 100 நபர்களுக்கு உணவு வழங்குதல் 50 பள்ளி மாணவர்களுக்கு நோட்டு பேனா பென்சில் என உபகரணங்கள் வழங்கப்பட்டது இதற்கு நிகழ்ச்சி ஏற்பாடுகள் நல்வாழ்வு மையம் அறக்கட்டளை நிறுவனர், திருமதி.நளினி அவர்கள் சமூக சேவகர்களுக்கு மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் விருது வழங்கினார்.


இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர், திரு.அருள்தாஸ் சமூக சேவகர், திருமதி.ராணி சமூக சேவை, திரு.புரட்சி சமூக சேவகர், சிறப்பு அழைப்பாளர், திரு. ஆர். வில்சன்ராஜசேகர், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் பொது துணை ஆட்சியர் அவர்கள்,  திருமதி. ஹேமாவதி திருப்பத்தூர் தாலுகா காவல் ஆய்வாளர் மற்றும் அரசு அதிகாரிகள் சமூக சேவகர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிவாரண பொருட்களை பெறுவதற்கு முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் நோட்டு புத்தகங்கள் பெறுவதற்காக பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர், நிறைவாக, நல்வாழ்வு மையம் அறக்கட்டளை நிறுவனர் திருமதி. நளினி அவர்கள் நன்றி உரை கூறினார், தமிழ் வளம் அறக்கட்டளை நிறுவனர், திரு. தமிழ் மொழி மற்றும் பல அறக்கட்டளை நிறுவனர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad