மேடு பள்ளம் நிறைந்த சாலைகள், உடனடியாக சீரமைக்க கோரிக்கை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 July 2022

மேடு பள்ளம் நிறைந்த சாலைகள், உடனடியாக சீரமைக்க கோரிக்கை.

திருப்பத்தூர் மாவட்டத்தின் வரலாற்றில் பொண்ணு எழுத்துக்களால் பொறிக்கபட வேண்டியது நம்முடைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,  மாண்புமிகு தமிழக முதல்வர், மு. க. ஸ்டாலின் அவர்கள், கடந்த 29/6/2022 அன்று திறந்து வைத்தார். திருப்பத்தூர் மாவட்ட மக்கள் அனைவருமே மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து தண்டபாணி கோயில் தெரு, வேதக்கார தெரு, மிகப்பெரிய வணிகப் பகுதியாக விளங்கும் சின்ன கடை தெரு வழியாக ஆலங்காயம்- திருவண்ணாமலை பகுதிகளுக்கு இருசக்கர வாகனத்தில் செல்லுகின்ற பொதுமக்கள்  ஒரு நாளைக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.


இந்த நிலையில் சாலையின் நடுவே மிக அதிக அளவில் பள்ளங்கள் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மழைக்காலங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றன, நெடுஞ்சாலை துறைக்கு சேர்ந்ததா? அல்லது நகராட்சிக்கு சேர்ந்ததா? குழப்ப நிலை உள்ளதால் இது சரியான நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் உள்ள இந்த நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad