அரசு பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு செஸ் போட்டி நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 14 July 2022

அரசு பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு செஸ் போட்டி நடைபெற்றது.

உலக அளவிலான 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவின்  மாமல்லபுரத்தில் நடைபெறுவதையொட்டி, தமிழக அரசின் ஆணைக்கிணங்க, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்த பள்ளி மாணவ- மாணவிகளுக்கான செஸ் போட்டி அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்றது.


திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 14, 17, 19( ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை) வயதுக்கு உட்பட்ட ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் இன்று மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவ- மாணவிகள், மாவட்ட, மாநில நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்று பொம்மிகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தண்டபாணி அவர்கள் தெரிவித்தார்.


இந்த நிகழ்வில், பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திரு. மணிவண்ணன், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ராதாகிருட்டிணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர், திருமதி. மேகலா விஜயகாந்த், துணைத் தலைவர் திருமதி. சத்யா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் திரு.விஜயன், ராஜேஸ்வரி சக்கரவர்த்தி உட்பட கலந்து கொண்டனர். இந்த போட்டியினை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்  திரு. தாமோதரன், திரு. ரவி மிகச் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad