மடவாளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள்விழா!!! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 18 July 2022

மடவாளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள்விழா!!!

திருப்பத்தூர் மாவட்டம், மடவாளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் , பெருந்தலைவர் காமராஜர் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளியின் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.


இந்த விழாவில், ஏணிப்படிகள்  அறக்கட்டளை நிறுவனதலைவர் திருமாவிமல் அவர்கள் ஒருங்கிணைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் P. கலைச்செல்வி, உதவி தலைமை ஆசிரியர். M.மருதமலை முன்னிலை வகித்தனர். மாடப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கோமதி கார்த்திகேயன், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருட்டிணன், பெருந்தலைவர் காமராஜர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் திரு. ஆனந்தகுமார், கனரா வங்கியின் காசாளர் கல்விஆர்வலர் திரு. ராஜா, VK பாராமெடிகல் நிறுவனர், திரு. சக்கரவர்த்தி, பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர், திரு. செல்வம் மற்றும் பெற்றோர்- ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், கலந்து கொண்டனர்.


பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, தங்கள் பாடப்பிரிவுகளில் 100% இலக்கை எட்டிய ஆசிரியர் பெருமக்களுக்கும்,  பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி, என்று பல்வேறு பிரிவில் நடைபெற்ற வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஏணிப்படிகள் அறக்கட்டளையின் சார்பாக கேடயங்கள்& பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் இருபால் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad