அரசு மருத்துவமனை உயிரைக் காப்பாற்றுவதற்கா? அல்லது உயிரை எடுப்பதற்கா? - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 July 2022

அரசு மருத்துவமனை உயிரைக் காப்பாற்றுவதற்கா? அல்லது உயிரை எடுப்பதற்கா?


திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவமனை பல்வேறு வசதிகள் இருந்தாலும், அந்த வசதிகள் இருக்கிறதா? என்றால் நிச்சயமாக இல்லை.


உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக மருத்துவமனை சென்றிருந்தேன், 4 மாடியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். படிக்கட்டில் ஏறுவதற்கு சிரமமாக இருந்தது அதனால் லிப்டை பயன்படுத்தலாமே என்று ஏறினேன். சுமார் 26 நபர்கள் செல்லக்கூடிய அளவில் இருந்த அந்த லிப்ட்டில் அவசர காலங்களில் என்னென்ன செய்யலாம்? செய்யக்கூடாது என்பதை பற்றியோ அவசர எண் பற்றியோ எதுவும்குறிப்பிடாமல் இருந்தது.


கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் அறுவை சிகிச்சை செய்பவர்கள் என்று பயணிக்கின்ற ,அந்த லிப்டில் நடுவழியில் நின்று விட்டாலோ, அல்லது மின்சாரம் தடை பட்டாலோ எந்தவிதமான வழிகாட்டுதல்களும் இல்லை. இதனால் நோயாளிகள் அதிர்ச்சி அடைகின்ற வாய்ப்பு அதனால் உயிரிழப்புகள் கூட ஏற்படுகின்ற சூழலும் இருக்கின்ற காரணத்தினால், மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.  

No comments:

Post a Comment

Post Top Ad