சாலை வசதி வேண்டி நூதன முறையில் நாற்று நட்ட கிராம இளைஞர்கள்!! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 22 July 2022

சாலை வசதி வேண்டி நூதன முறையில் நாற்று நட்ட கிராம இளைஞர்கள்!!

திருப்பத்தூர் மாவட்டம் பொம்மி குப்பம் ஊராட்சிக்கு, 2 வார்டுக்கு உட்பட்ட ஜோன்றம்பள்ளி சாலை 20 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்து சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது.


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பெய்த கனமழையின் காரணமாக சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கியது இதனால் அந்த சாலை வழியாக பள்ளிக்குச் செல்கின்ற 1000 கணக்கான மாணவ- மாணவிகள், தனியார்  கல்லூரி பள்ளி வாகனங்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

இதுகுறித்து பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், அந்தப் பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் சாலையின் நடுவே நாற்று நட்டு தங்களுடைய நூதமான எதிர்ப்பை தெரிவித்தனர். 


தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. சங்கர்(கி.ஊ) திரு. மணவாளன்,(வ.ஊ) ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திரு. சிவகுமார், ஊராட்சி மன்ற செயலாளர் திரு. ஆனந்தராஜ், பணிதல பொறுப்பாளர் திரு. அசோகன் ஊராட்சி மன்ற உறுப்பினர் சுகந்தி சுரேஷ், மணிகண்டன் உட்பட, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, தற்காலிகமாக நொறம்பு மண் கொட்டி சமன்படுத்துவது எனவும், பிறகு நிரந்தரமாக தார் சாலை அமைக்கப்படும் என்று இளைஞர்களிடத்தில் உறுதி அளித்ததின் பேரில் கிராம இளைஞர்கள் சமாதானம் அடைந்தனர். 


பொம்மிககுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி. மேகலா அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் சாலை வசதி விரைவுபடுத்த கோரி  கோரிக்கை மனுவையும் அளித்தனர். இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

Post Top Ad