திருப்பத்தூரை பசுமையாக்கும் பணியில், நகராட்சி நிர்வாகம்!!! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 July 2022

திருப்பத்தூரை பசுமையாக்கும் பணியில், நகராட்சி நிர்வாகம்!!!

சந்தன நகரம் என்று அழைக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தை பசுமையாக்கும் முயற்சியில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கமும் பசுமை தாய்நாடு அறக்கட்டளையும் இணைந்து, திருப்பத்தூர் நகராட்சி 36 வது வார்டுக்கு உட்பட்ட குள்ளச்சாரி வட்டத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.


இந்த விழாவில் திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர், பி. ஜெயராமராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டு  தொடங்கி வைத்துக் கூறியதாவது, திருப்பத்தூர் நகராட்சி மற்றும் பசுமைத்தாய்நாடு அறக்கட்டளையுடன் இணைந்து திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சுமார் 100000 மரக்கன்றுகள் நடும் முயற்சியில் நகராட்சி நிர்வாகம் இலக்காக வைத்துள்ளது என்று கூறினார்.


36-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் திரு. வெற்றி கொண்டான், பசுமை தாய் நாடு அறக்கட்டளை நிறுவன தலைவர் & மாவட்ட பசுமை குழு உறுப்பினர் திரு. சத்யராஜ், பசுமை தாய் நாடு அறக்கட்டளையின் பொருளாளர், திரு. பாலமுருகன், துப்புரவு ஆய்வாளர் திரு. குமார், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ராதாகிருட்டிணன், உட்பட திருப்பத்தூர் நகராட்சி பணியாளர்கள் பசுமை தாய்நாடு அறக்கட்டளையின் நிர்வாகிகள் என்று கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad