பள்ளி மேலாண்மை குழு முதல் கூட்டமும், நெகிழ்ச்சியான சம்பவமும்!!! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 July 2022

பள்ளி மேலாண்மை குழு முதல் கூட்டமும், நெகிழ்ச்சியான சம்பவமும்!!!

தமிழகம் முழுவதும் பள்ளி மேலாண்மைக்கான முதல் கூட்டம் இன்று அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்றது, திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் ஊராட்சி, இந்திராநகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.


இந்த நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவஞானம் தலைமை தாங்கினார், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருட்டிணன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள் என்று திரளாக கலந்து கொண்டு, பள்ளியின் வளர்ச்சிக்கான ஆலோசனைகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வகையான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் முத்தாய்ப்பாக அந்த பள்ளியின் வார்டு உறுப்பினர் திருமதி பூவரும்புசர்வேசன்  அவர்கள், பள்ளியின் வளர்ச்சிக்காக ₹2000 ரூபாய் நன்கொடையாக கொடுத்தது, வருகை தந்த பெற்றோர்களுடைய நிகழ்ச்சியை ஏற்படுத்தியது. 


கலந்து கொண்ட பெரும்பாலான பெற்றோர்கள், தங்களால் முடிந்த உதவிகளை செய்வதாக வாக்குறுதி வழங்கியதை அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad