பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, விதைப்பந்து கொடுத்து அசத்திய அரசு பள்ளி மாணவ- மாணவிகள்!!! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 1 July 2022

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, விதைப்பந்து கொடுத்து அசத்திய அரசு பள்ளி மாணவ- மாணவிகள்!!!

திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை அறிமுக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு S. சிவஞானம் அவர்கள் தலைமை தாங்கி வரவேற்றார். 


ஊர் பெரியோர்கள் பெருமாள், கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தனர். இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், சிறப்பு அழைப்பாளர், இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருட்டிணன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இதில் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

வருகை தந்த அனைத்து பெற்றோர்களுக்கும் மாணவ - மாணவிகள் தயார் செய்து வைத்திருந்த விதைப்பந்துகள் வழங்கப்பட்டு, பள்ளியின் வளாகத்தில் நடப்பட்டது. பள்ளியின் தரம் உயர்வு பற்றி விவாதிக்கப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது என்று முடிவெடுக்கப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி. ராகினி மோகன் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad