திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டையில் நக்சலைட் சிவலிங்கம் என்பவரை பிடித்து ஜீப்பில் அவரை அழைத்து சென்ற போது திருப்பத்தூர் அருகே சேலம் பிரதான சாலையில் சிவலிங்கம் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்ததில் ஜீப்பில் இருந்த காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, தலைமை காவலர் ஆதிகேசவேலு, காவலர்கள் யேசுதாஸ் மற்றும் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
இந்த நிலையில் ஆண்டு தோறும் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் வீரமரணம் அடைந்த 4 காவல் துறையினருக்கு கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில் வீரவணக்கம் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது., இந்த நிலையில் இன்று வீரமரணம் அடைந்த 4 காவல்துறை அதிகாரிகளுக்கு 42ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் 30 குண்டுகள் முழுங்க இன்று அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஓய்வு பெற்ற காவல் துறை இயக்குனர் தேவாரம் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனிவிஜயா, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து தேமுதிக திருப்பத்தூர் மாவட்ட துணைச் செயலாளர் சி.எஸ்.சரவணன், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம்,மற்றும் உயிரிழந்த காவலர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர், இந்த நிகழ்வில் காவல் துறை சார்ந்த அதிகாரிகள் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment