திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நகர மன்ற தலைவருக்கும் நகராட்சி ஆணையாளருக்கும் வாகனங்கள் வழங்கப்படுதையொட்டி வாகனத்தின் சாவிகள் வழங்கப்பட்டன.
மேலும் நகர செயலாளர் ராஜேந்திரன் நகராட்சி கட்டிடம் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவே புதிய கட்டிடம் கட்டித் தர நிதி உதவி தர வேண்டும் என்று மாவட்ட செயலாளர் தேவராஜிடம் கோரிக்கை வைத்தார்.
அப்போது நிதி பற்றாக்குறைகள் அரசே மந்தமாகத்தான் இருக்கிறது கொஞ்சம் பொறுங்கள் என்று கூறும் பொழுது சிரிப்பலை எழுந்தது.
இந்நிகழ்ச்சியின் போது நகர மன்ற துணைத் தலைவர் சபியுல்லா, சி பி கிருஷ்ணன் கந்திலி ஒன்றிய விவசாய துணை செயலாளர் உள்ளிட்ட கழகத் நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என பலர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment