அரசு உயர்நிலைப் பள்ளியில், குழந்தை நல பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 August 2022

அரசு உயர்நிலைப் பள்ளியில், குழந்தை நல பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது!

திருப்பத்தூர் மாவட்டம் ஜம்மணபுதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 02/08/2022 இன்று குழந்தைகள் நல பாதுகாப்பு சார்பாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.


இந்த கூட்டத்திற்கு AK மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பு. வேலு, அவர்கள் தலைமை உரையில் பேசியதாவது:

இன்றைய குழந்தைகள் தங்களின் எதிர்காலம் பற்றி தெரியாமலேயே பல்வேறு விதமான தவறான வழிகளில் ஈடுபடுகின்றனர். இதனை கட்டுப்படுத்த பெற்றோர்கள்- ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என்று ஒன்றிணைந்து இதற்காக குரல் கொடுக்க வேண்டும் என்று பேசினார்.


பள்ளியின் ஆசிரியர் காந்தி அவர்கள், தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஏணிப்படிகள் அறக்கட்டளை நிறுவனர். திருமா விமல், குழந்தைகள் நலமைய ஆலோசகர்கள் மேனகா, பாலு, இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருட்டிணன் கலந்து கொண்டு மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad