இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில், இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்பு! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 1 August 2022

இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில், இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்பு!

திருப்பத்தூர் மாவட்டம் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் திருப்பத்தூர் இயற்கை வட்டம் அமைப்பு சார்பாக சூழலியல் ஆர்வலர்கள் பங்கேற்பு நடைபெற்றது. 


இந்த நிகழ்வில் எழுத்தாளர், இயக்குனர், சூழலியல் ஆர்வலர் என்று பன்முகத் திறமை கொண்ட கோவை சதாசிவம் அவர்கள் கலந்து கொண்டார். சூழல் சார்ந்த நெருக்கடிகள் இன்று உலகம் முழுவதும் இன்றைய இளம் தலைமுறை சந்தித்து வருகின்றனர். அடுத்த தலைமுறையை நாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், நாம் இப்பொழுது இருந்தே குழந்தைகளுக்கு, சூழலியல் பாடங்களை கற்றுத் தர வேண்டும் என்று பேசினார்.


இயற்கை ஆர்வலர்கள், நம் மக்களின் குரல். ராதாகிருட்டிணன், பசுமை தாய்நாடு அறக்கட்டளையின் நிறுவனர். சத்யராஜ், இயற்கை மீட்பு அறக்கட்டளை தலைவர். இல நாராயணன், காமராஜர் கல்வி அறக்கட்டளை நிறுவனர். ஆனந்தகுமார், காக்கை ராம்பிரசாத், புகைப்படக் கலைஞர் திருமலைவாசன், சமூக ஆர்வலர். முத்தமிழ், உட்பட இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். நல்வழி கரிகாலன், ஆற்றல் பிரவீன்குமார், இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர் இறுதியாக ஆண்டியப்பனூர் சித்தமருத்துவர் விக்ரம்குமார் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

No comments:

Post a Comment

Post Top Ad