திருப்பத்தூர் சிவராஜ் பேட்டை, போஸ்கோ நகர் பகுதி மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!!! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 1 August 2022

திருப்பத்தூர் சிவராஜ் பேட்டை, போஸ்கோ நகர் பகுதி மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!!!

திருப்பத்தூர் மாவட்டம் சிவராஜ் பேட்டை போஸ்கோ நகர் அம்பேத்கர் நகர் பொன்னியம்மன் கோயில் தெரு வாணியம்பாடி சாலைப்  உள்ளிட்ட பகுதிகளில் திருப்பத்தூர் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இருந்த கடைகள் அகற்றப்பட்டன மீதமுள்ள குடியிருப்பு பகுதிகளும் விரைவில் இடிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்ததை அடுத்து அந்த பகுதி மக்கள் போராட்ட களத்தில் இறங்கினர் அதன் ஒரு பகுதியாக இன்று காலையில் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து அந்தப் பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர்.


இதற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். அதிகாரிகளின் சமரசத்தை தொடர்ந்து வட்டாட்சியர் அளவிலான பேச்சுவார்த்தையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் இரா சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தலைமையில், அதிமுக கவுன்சிலர் சரவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் ஆனந்தன், திமுக நகர துணை செயலாளர் செல்வம், காங்கிரஸ் கட்சியின் நெடுமாறன், பிஜேபி விநாயகமூர்த்தி, முன்னாள் மாவட்ட செயலாளர், திராவிடர் கழக. கலைவாணன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் வழக்கறிஞர் ஆனந்த கிருஷ்ணன், அம்பேத்கர் பொம்மிகுப்பம் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் பாதிக்கப்பட்ட மக்கள் அதே பகுதியில் நிரந்தரமாக குடியிருக்க ஆவன செய்ய வேண்டும், மாற்று இடம் தருவதாக இருந்தால் வீடுகள் கட்டி தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர் இதனை வட்டாட்சியர் அவர்கள் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார். உறுதியளித்ததின் பேரில் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. ஒருவேளை இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் இந்த போராட்டம் தொடரும் என்று கூட்டாக அறிக்கை அளித்தனர் .

No comments:

Post a Comment

Post Top Ad