திருப்பத்தூர் மாவட்டத்தில் மீன் வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 19 August 2022

திருப்பத்தூர் மாவட்டத்தில் மீன் வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு.

திருப்பத்தூர்  மாவட்டத்தில் மீன் வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகள் பிரதம மந்திரி மீனவள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) 2021-2022 கீழ் புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்து மீன வளர்ப்பு செய்யும் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.


புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள்

 புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்திட  திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 1தொடர்பு இலக்கு  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது இத்திட்டத்தில் அலகு ஒன்றிற்கு ஆகும் செலவின் தொகை ரூ 700000/. ல் பொதுப் பயணாளிகளுக்கு (  GC) 40% மானியம் ரூ.280000/ பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயணாளிகளுக்கு  (SC) 60%  மானியம் ரூ.420000 மானியமாக வழங்கப்படும்


புதிய மீன் வளர்ப்பு குளங்கள்

புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்திட திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 1 வெக்டர்  இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . இத்திட்டத்தில் அலகு ஒன்றிற்கு ஆகும் செலவின் தொகை  ரூ 70,0000/ல் பொதுப் பயணாளிகளுக்கு(OC) 40% மானியம் ரூ 2,80,000/ பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு(60)% மானியம் ரூ 4,20,000 / மானியமாக வழங்கப்படும்


பன்னீர் மீன் வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம்

நன்னீர் மீன் வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம்  வழங்குதல் திட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 1 ெவக்டர்  இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இலக்கு ஒன்றிற்கு ஆகும் செலவின் தொகை ரூ 4,00,000/ ல் பொதுப் பயனாளிகளுக்கு ( GC) 40%  மானியம் ரூ 1,60,000 / பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயணாளிகளுக்கு( SC) 60%  மானியம் ரூ 2,40,000 / மானியமாக வழங்கப்படும்.


சிறிய அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல்

சிறிய அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல்  திட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 1அலகு  இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அலகு ஒன்றிற்கு ஆகும் செலவின் தொகை ரூ 7,50,000/ல் பொதுப் பயனாளிகளுக்கு(GC)40% மானியம் ரூ 3,00,000/ பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயணாளிகளுக்கு(SC)60% மானியம் ரூ4,50,000/ மானியமாக வழங்கப்படும்.


விண்ணப்பங்கள்

மேற்கண்ட திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . மேலும் இத்திட்டத்தில் இம்மாவட்ட இலக்குக்கு அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்படுமாயின் பயனாளர்கள் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இத்திட்டத்தில் பயன் பெற விரும்புபவர்கள் உடனடியாக மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர், வேலூர் அலுவலகத்தை (எண் 16, 5 வது மேற்கு குறுக்கு தெரு  காந்தி நகர், காட்பாடி, வேலூர் 600 007 (அலுவலக தொலைபேசி எண் 04162240329, அலை பேசி எண் 9384824248 மின்னஞ்சல் adififvellore1@gmail.com) தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சி  தலைவர் திரு அமர் குஹ்வாஹா.இ,ஆ,ப அவர்கள் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad