ஆம்பூரில் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளி சென்ற 2 மாணவிகள் கண்டெய்னர் லாரி மோதி உயிரிழப்பு - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 September 2022

ஆம்பூரில் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளி சென்ற 2 மாணவிகள் கண்டெய்னர் லாரி மோதி உயிரிழப்பு


ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம்  ஊராட்சி குமராமங்கலம் கூட்டு  மேயின்ரோடு பகுதியை சேர்ந்த தண்டபாணி. இவர் பிளாஸ்டிக் கதவு ஜன்னல்கள் செய்யும் கடை  வைத்துள்ளார்.


இவரது மனைவி அனுராத. இவர்களின் 2 பெண் பிள்ளைகள் ஆம்பூர் கோவிந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்தனர்.


முதல் மகள் ஜெய் ஸ்ரீ வயது(18), 2-வது மகள் வர்ஷா வயது (11) இருவரையுமே தினசரி பள்ளி வாகனங்கள் மூலம் பள்ளி செல்லும் இவர்கள், இன்று பள்ளி வாகனத்தை தவிர விட்டதால் தந்தை தண்டபாணி தனது இருசக்கர வாகனம் மூலம் அழைத்து சென்ற போது ஆம்பூர் OAR தியேட்டர் சிக்னல் அருகே ஓசூரில் இருந்து சென்னைக்கு கனரக 40 அடி நீளமுள்ள லாரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புகளை இடித்து தாறுமாறாக ஓட்டி தண்டபாணி மீது மோதி தண்டபாணி லாரியின் இடையில் சிக்தி படுகாயம் அடைந்தார்.


பைக்கில் பின்புறம் உட்கார்ந்து வந்த அக்கா தங்கைகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலி, இது குறித்து ஆம்பூர் டவுன் காவல்துறை வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். லாரி ஓட்டுநர் தப்பி ஓடிய போது பொதுமக்கள் பிடித்து தருமாடி கொடுத்தனர். அவர் தற்போது ஆம்பூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.


பள்ளி மாணவிகள் அக்கா தங்கை இருவர் விபத்தில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad