மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 28 October 2022

மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது.


வாணியம்பாடி அருகே  மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த ராஜா என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா(44).இவர் வசிக்கும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கபட்ட 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தப்பி சென்றுள்ளார். சிறுமி அழுதவாரு வீட்டிற்கு வந்த போது சிறுமிக்கு  நடந்தது பெற்றோர்க்கு தெரியவந்துள்ளது. உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு ராஜாவின் வீட்டிற்கு சென்ற போது அவர் இல்லாததால் ராஜாவின்  மனைவியை வெளியே அனுப்பிவிட்டு அப்பகுதி மக்கள் வீட்டிற்கு பூட்டு போட்டனர்.


பின்னர் சம்பவம் குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் தப்பி தலைமறைவான ராஜாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தன் சொந்த மகளையே பாலியல் துன்புறுத்தல் செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறை தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/