திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மின் வாரிய அலுவலகத்தில் அரக்கோணம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (25) என்பவர் மின்வாரிய பயிற்சி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஆம்பூர் பர்ணக்கார வீதியில் உள்ள மின்கம்பத்தில் மின்சாரம் கம்பி பழுது பார்க்க கம்பத்தில் ஏறிய போது எதிர்பாரா விதமாக மின்சாரம் தாக்கி மின்கம்பத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பாடு பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து விரைந்தசென்ற ஆம்பூர் நகர காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment